Categories
அரசியல் மாநில செய்திகள்

அதுலாம் ஒரு கட்சியா ? அடமானம் வச்சு இருக்கு…. மாறி மாறி பேரம் பேசுது…. விக்ரமன் பரபரப்பு குற்றசாட்டு …!!

அரக்கோணம் இரு இளைஞர்கள் படுகொலையை கண்டித்து நடந்த ஆர்ப்பாட்டத்தில் விக்ரமன் பாமகவை கடுமையாக விமர்சித்தார்.

அரக்கோணம் படுகொலையை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி நடத்திய ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு பேசிய விக்ரமன், அரக்கோணம் சோகனுரில் படுகொலை செய்யப்பட்ட நம்முடைய தம்பிகள், சூர்யா மற்றும் அர்ஜுனன் ஆகியோர் படுகொலையை கண்டித்து, அந்த பாமக சாதிவெறியர்களின், அந்த மனநிலையை, அந்த செயல்பாட்டை கண்டித்து, தமிழ்நாடு முழுவதும் மாவட்டங்களில் நடக்கக்கூடிய மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தை விடுதலை சிறுத்தைகள் கட்சி நடத்தி  கொண்டு இருக்கிறது.

வள்ளுவர் கோட்டத்தில் தலைவர் எழுச்சித் தமிழர் அவர்கள் தலைமையில் இந்த மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்து கொண்டு இருக்கிறது. பாமக  என்கிற கட்சியை தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை, நாம் இங்கு எழுப்ப வேண்டிய தேவை இருக்கிறது. ஒரு அரசியல் கட்சியை நாம் தடை செய்ய வேண்டும் என்று கேட்கலாமா ? ஏன் என்றால் அரசியல் அமைப்புப்படி ரிஜிஸ்டர் ஆன ஒரு கட்சியை ஏன் நாம் தடை செய்ய வேண்டும் என்று கேட்கிறோம், அப்படி என்ற ஒரு கேள்வியை ஜனநாயக சக்திகள் நம்மிடம் கேட்கலாம்.

ஆனால் பாமக ஒரு அரசியல் கட்சியா ? என்பதை நாம் பார்க்க வேண்டும். பாட்டாளி மக்கள் கட்சி வெறும் ஒரே ஒரு சமுதாய மக்கள் வாக்குகள் இருந்தால் போதும், அதை வைத்து ஒவ்வொரு கூட்டணியிலும், ஒவ்வொரு தேர்தலின் போதும், மாற்றி மாற்றி பேரம் பேசி அந்த மக்களை வந்து, அடமானம் வைத்து பணம் சம்பாதிக்க கூடிய ஒரு கட்சியாக… கட்டப்பஞ்சாயத்து கட்சியாக, ஒரு ரவுடி கும்பல் ஆக மாறிவிட்டது. அதனாலதான் அந்த கட்சியை தடை செய்யச் சொல்கிறோம். அந்தக் கட்சியால் ஏதாவது ஒரு முன்னேற்றம் இருக்கிறதா ? என்று பார்க்கவேண்டும்.

ஏதோ பத்தரை சதவீதம் இட ஒதுக்கீடு வாங்கி கொடுத்து விட்டோம் , வாங்கி கொடுத்துவிட்டோம்  என்று ராமதாஸ் அவர்கள் பேசிக்கொண்டு இருக்கிறார். ஆனால் அந்த 10% சதவீதம் என்பதே அந்த சமுதாய மக்களுடைய…. அவர்களுக்கு நியாயமாக கிடைக்கக்கூடிய அந்த 15 சதவீதத்தை குறைத்து….. ஏற்கனவே அவர்கள் 16% வேலை வாய்ப்பிலும், கல்வியிலும் முன்னேறிக் கொண்டு இருந்த நிலையை மாற்றி…..  6 சதவீதத்தை அவர்களிடம் இடம் பிடிங்கி கொண்டு வெறும் ஓட்டுக்காக  சமரசம் செய்து கொண்டு 10.5% சதவீதம் என்று சொல்கிறார்.

Categories

Tech |