ஜம்முவில் உஷார் நிலையில் விமானப்படையும் , இராணுவமும் இருப்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சுதந்திர தின விழா இன்னும் 12 நாட்களில் வரக்கூடிய நிலைகளில் இதற்காக காஷ்மீரில் வழக்கமாகவே ராணுவ பாதுகாப்பு அதிகரிக்கப்படும். ஏனெனில் இந்த நேரத்தில் அதிக அளவில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தபடுவது மிக அதிகமாக இருக்கும். எனவே அதனை முறியடிக்க ராணுவம் அதிகரிக்கப் பட்டுள்ளது. அதே இன்னும் சில மாதங்களில் ஜம்மு-காஷ்மீர் மிகவும் கடுமையான குளிர் நிலவும் அந்த சமயத்தில் தீவிரவாதிகள் ஊடுருவல் அதிகளவில் இருக்கும்.
மேலும் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் தேவையில்லாத தீவிரவாத தாக்குதல் நடந்து விட கூடாது என்பதற்க்காக எல்லைப் பகுதி மிக தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றது. இதனை தவிர தற்பொழுது ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் தீவிரவாத தாக்குதல் நடத்தப்படலாம் என்று உளவுத்துறையும் எச்சரிக்கை விடுத்த நிலையில் இந்த தீவிர நடவடிக்கையை ராணுவம் மேற்கொண்டு வருகின்றது.