திண்டுக்கல்லில் அரசு கல்லூரி விடுதி கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதால் கொரோனா வார்டாக மாற்றப்படுகிறது.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அரசு எம்.வி.எம். மகளிர் கல்லூரியில் கொரோனா தோற்று அதிகரித்தபோது நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக கொரோனா வார்டு அமைக்கப்பட்டது. அதன்பிறகு தொற்று குறைந்ததன் காரணமாக வார்டு மூடப்பட்டது. இந்நிலையில் கொரோனா மீண்டும் வேகமாக பரவி வருவதால் மறுபடியும் கொரோனா வார்டு கல்லூரியில் அமைக்கப்படுகிறது. இதற்கான பணிகள் நேற்று முன்தினம் தொடங்கின. இதனை முன்னிட்டு கிருமி நாசினி மருந்து தெளித்து விடுதியை சுத்தம் செய்யும் பணியில் சுகாதார பணியாளர்கள் ஈடுபட்டனர்.
மேலும் கொரோனா வார்டாக இன்னும் ஒரு சில நாட்களில் மாணவிகள் விடுதி செயல்பட உள்ளது. மேலும் 150 படுக்கைகள் கொண்ட அரசு கொரானா சிகிச்சை மையம் பைபாஸ் ரோடு பகுதியில் உள்ள தானியக்கிடங்கில் அமைக்கப்பட்டுள்ளது. இதுதவிர கொரோனா சிகிச்சை மையம் காந்திகிராமத்தில் அமைக்கப்படும். மேலும் வேடசந்தூர், நத்தம், நிலக்கோட்டை அரசு மருத்துவமனைகளில் தனி சிகிச்சை பிரிவு கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க தொடங்கப்பட உள்ளது என்றார்.