தென் ஆப்பிரிக்கா – பாகிஸ்தான் அணிகளுக்கிடையே ,நடந்த முதல் டி20 போட்டியில், பாகிஸ்தான் அணி 1-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.
தென் ஆப்பிரிக்கா – பாகிஸ்தான் அணிகளுக்கிடையே, 3 ஒருநாள் தொடர் மற்றும் 4 டி-20 போட்டிகள் நடந்து வருகிறது . இதற்கு முன் நடந்த ஒருநாள் தொடரில் பாகிஸ்தான் அணி 2-1 என்ற கணக்கில் வெற்றியை கைப்பற்றியுள்ளது. இதைத்தொடர்ந்து ஜோகன்ஸ்பர்க்கில் நேற்று நடந்த முதல் டி20 போட்டியில், தென் ஆப்பிரிக்கா – பாகிஸ்தான் அணிகள் மோதிக்கொண்டன. முதலில் டாஸ் வென்ற தென்ஆப்பிரிக்கா அணி, பேட்டிங்கை தேர்ந்தெடுத்தனர். அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக மாலன் – மார்க்ரம் ஜோடி களமிறங்கியது.
தென்ஆப்பிரிக்கா அணி தொடக்கத்திலிருந்தே அதிரடி ஆட்டத்தை காட்டியது. மாலன் 24 ரன்களில் ஆட்டமிழக்க ,அடுத்து களமிறங்கிய வுஹன் லூபி 4 ரன்களில் அவுட் ஆனார். இதற்கடுத்து தென்ஆப்பிரிக்க அணியின் கேப்டனான கிளாசன் களமிறங்கினார். கிளாசன் – மார்க்ரம் ஜோடி இணைந்து ,சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர் . அதிகபட்சமாக மார்க்ரம் 51 ரன்களும் கேப்டன் கிளாசன் 28 பந்துகளில், 4 சிக்ஸர் அடித்து 50 ரன்களில் வெளியேறினர் . இறுதியாக 20 ஓவர்களின் முடிவில், 6 விக்கெட்டுகளை இழந்து ,188 ரன்களை குவித்தது.
இதையடுத்து களமிறங்கிய பாகிஸ்தான் அணி ,189 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு விளையாடியது. தொடக்க ஆட்டக்காரர்களாக முகமது ரிஸ்வான்- பாபர் அசாம் ஜோடி களமிறங்கியது. பாபர் அசாம் 14 ரன்களில் ஆட்டமிழந்தார். இதன்பின் களமிறங்கிய பகர் சமான்( 27) ரன்கள் ,முகமது ஹபீஸ் (13) ரன்கள், ஹைதர் அலி (14) ரன்கள் மற்றும் முகமது நவாஸ் (0) ஆகிய வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். ஒருபுறம் விக்கெட்டுகளை இழந்துக்கொண்டு வந்தாலும் , மறுபுறம் முகமது ரிஸ்வான் அரை சதம் எடுத்து அசத்தினார் .
இவருடன் பஹூம் அஷ்ரப் இணைந்து,எதிரணியின் பந்துவீச்சுகளை அடித்து விளாசினர் . இறுதி கட்டத்தில் பாகிஸ்தான் அணி 19.5 ஓவர்களில் முடிவில் , 6 விக்கெட் இழப்பிற்கு 189 ரன்களை எடுத்தது. இதனால் பாகிஸ்தான் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் ,தென் ஆப்ரிக்காவை வீழ்த்தி வெற்றி பெற்றது. இதன் மூலம் 4 போட்டிகள் கொண்டே டி20 தொடரில் ,பாகிஸ்தான் அணி 1-0 என்ற கணக்கில் ,வெற்றியை கைப்பற்றியது. இதில் பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரரான முகமது ரியாஸ் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 50 பந்துகளில் 74 ரன்களை குவித்து ,அணியின் வெற்றிக்கு வழிவகுத்தார். இதற்காக ஆட்டநாயகன் விருது முகமது ரிஸ்வான்-க்கு வழங்கப்பட்டது.