சென்னையில் அடுத்த 20 நாட்கள் மிக நெருக்கடியாக இருக்கும் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் கோ. பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று அதிகரித்துக் கொண்டே இருக்கின்றது. இதை கட்டுக்குள் வைக்க பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாநில அரசு எடுத்து வருகிறது. தமிழகத்தில் நேற்று முதல் பல கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளது. சென்னையில் முக்கியமான இடங்களில் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளது. முககவசம் அணியாமல் செல்பவர்களுக்கு ரூபாய் 200 அபராதமும், பொது இடங்களில் எச்சில் துப்பும் அவர்களுக்கு ரூபாய் 500 அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் சென்னையில் அடுத்த 20 நாட்களுக்கு மிக நெருக்கடியான காலம் என மாநகராட்சி ஆணையர் கோ. பிரகாஷ் அறிவித்துள்ளார். கொரோனா பரவல் உச்சத்தில் இருக்கும் என்று அவர் எச்சரித்துள்ளார். அதனால் பொதுமக்கள் விரைவாக தடுப்பூசி போட்டுக் கொள்வது மிகவும் நல்லது என்றும், காய்ச்சல், சளி, வயிற்றுப்போக்கு, சோர்வு உள்ளிட்ட பிரச்சினைகள் இருந்தால் வீடு வீடாக வரக்கூடிய மாநகராட்சி பணியாளர்களிடம் பொதுமக்கள் உடனடியாக தெரிவிக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.