அரக்கோணம் அருகே தேர்தல் தகராறில் அர்ஜுனன், சூர்யா என்ற தலித் இளைஞர்கள் இருவர் கொல்லப்பட்டதை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பேசிய விடுதலை கட்சியை சார்ந்தவரும், இளம் பத்திரிகையாளருமான விக்ரமன், இந்து பத்திரிக்கையில் ஒரே ஒரு பேட்டியில் தமிழகத்தில் 13.6% வணிகர்கள் வந்து இருக்கிறார்கள் என்று சொன்னார்கள்.
ஆனால் 20 சதவீத இட ஒதுக்கீடு கேட்டு, 200 பேரை திரட்டி, பஸ் மேல், ரயில் மேல் கல்லை கொண்டு எறிந்தார். பப்ளிக் மேல் அவ்வளவு பெரிய வன்முறை வெறியாட்டத்தை நிகழ்த்தினார். பப்ளிக் எல்லாம் பார்த்து பாட்டாளி மக்கள் கட்சி என்றாலே ரவுடிகள் என்று பயப்படுகின்றார்கள். ஆனால் அந்த கட்சியை சேர்ந்த குண்டர்கள், நம்ம கட்சியை பார்த்து ரவுடி கட்சி ,கட்டப்பஞ்சாயத்து கட்சி என்று சொல்கிறார்.
படுகொலை செய்யப்பட்ட அர்ஜுனனுக்கும், சூர்யாவுக்கும் குடிப்பழக்கம் கிடையாது. ஆனால் அவர்கள் குடிபோதையில் ஏதோ தகராறு நடந்து விட்டதாக சொல்கிறார் .அவர்கள் என்ன தவறு செய்தார்கள் ? நம் கட்சியை சேர்ந்த வேட்ப்பாளர்கள் திரு.கெளதம் சனாப் அவர்களுக்கு, பானை சின்னத்தில் வாக்கு கேட்டார்கள், இது தவறா ? இவர்கள் எல்லாம் எப்படி வாக்கு கேட்கலாம் ? இவர்கள் எல்லாம் ஓட்டு போடும் நிலைமையில் இருந்து, வாக்கு கேட்கும் நிலைமைக்கு வந்து விட்டார்களே என்ற வெறியும்,
வன்மமும் தான் இதற்கு காரணம். அப்போ இந்த வன்மத்தை தூண்டி விடக்கூடிய பாட்டாளி மக்கள் கட்சியை நாம் சும்மா விடலாமா ? ஜனநாயக பூர்வமாக அணுக வேண்டும். ஜனநாயக பூர்வமாக இந்த கட்சியினுடைய அங்கீகாரத்தையும், இந்த கட்சியையும் தடை செய்ய வேண்டும். பாமகவை தமிழ்நாட்டில் இருந்தே தடை செய்ய வேண்டும் என தெரிவித்தார்.