Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

ப்பா என்னா ஸ்டைலு… கீர்த்தி சுரேஷின் நியூ லுக்… குவியும் லைக்ஸ்…!!!

நடிகை கீர்த்தி சுரேஷ் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் கீர்த்தி சுரேஷுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இவர் நடிகர் விக்ரம் பிரபு நடிப்பில் வெளியான இது என்ன மாயம் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர். இதை தொடர்ந்து இவர் சிவகார்த்திகேயன், விஜய், சூர்யா, தனுஷ், விக்ரம் உள்ளிட்ட பல டாப் ஹீரோக்களுடன் இணைந்து நடித்து அசத்தினார். இவர் தமிழில் மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழி திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். தற்போது நடிகை கீர்த்தி சுரேஷ் சாணிக் காயிதம், அண்ணாத்த ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார்.

சமீபத்தில் இவர் தெலுங்கு நடிகர் நிதினுடன் இணைந்து நடித்த ரங் தே திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது . மேலும் நடிகை கீர்த்தி சுரேஷ் அவ்வப்போது தனது சமூக வலைதளப் பக்கத்தில் தனது அழகிய புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். இந்நிலையில் நடிகை கீர்த்தி சுரேஷ் மாடர்ன் உடையில் செம ஸ்டைலாக போஸ் கொடுத்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். தற்போது இந்த புகைப்படத்திற்கு ஏராளமான லைக்குகள் குவிந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |