Categories
உலக செய்திகள்

54 ஆயிரம் மைல் வேகத்தில் விண்கல்… பூமிக்கு இன்று ஆபத்து?… விஞ்ஞானிகள் தகவல்…!!!

மிகப்பெரிய விண்கல் ஒன்று இன்று மிக நெருக்கமாக பூமிக்கு அருகில் வந்து செல்வதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

விண்வெளியில் மிகப்பெரிய விண்கல் ஒன்று பூமிக்கு நெருக்கமாக இன்று வந்து செல்வதாக நாசா விஞ்ஞானிகள் தகவல் தெரிவித்துள்ளனர். பூமிக்கும் நிலவுக்கும் இடையே செல்லும் இந்த விண்கல் மணிக்கு 54 ஆயிரம் மைல் வேகத்தில் செல்கிறது. 2021 ஜிடி3 என்று பெயரிடப்பட்டுள்ள இந்த விண்கல் பூமிக்கு ஆபத்து இல்லை. சக்திவாய்ந்த தொலைநோக்கி மூலம் இந்த விண்கல்லை பார்க்க முடியும் எனவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். ஆனால் இந்த அறிவிப்பு மக்கள் மத்தியில் சற்று அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |