பாஜக பிரமுகர் அரசு அலுவலகங்களில் குடியரசுத் தலைவர் மற்றும் பிரதமர் மோடியின் புகைப்படங்களை வைக்க வேண்டும் என்று வழக்குத் தொடுத்திருந்தார் அதற்கு இன்று உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
தமிழகத்தில் அரசு அலுவலகங்களில் பல முக்கிய தலைவர்களின் புகைப்படங்கள் இருக்கும். சில கட்சி அலுவலகங்களில் அந்தந்த கட்சியை சார்ந்த முக்கிய தலைவர்களின் புகைப்படங்கள் இடம்பெற்றிருக்கும். அதேபோன்று தமிழக அரசு அலுவலகங்கள் குடியரசுத் தலைவர், பிரதமரின் புகைப்படங்களை வைக்க வேண்டுமென்று பிரமுகர் ஜெயக்குமார் என்பவர் வழக்கு ஒன்றை தொடர்ந்திருந்தார். அதற்கு இன்று உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதில் தமிழக அரசு அலுவலகங்களில் குடியரசுத் தலைவர் பிரதமரின் புகைப்படங்களை வைப்பது பற்றி அந்தந்த அலுவலகங்கள் தான் முடிவு எடுக்க வேண்டும் என்று தீர்ப்பளித்துள்ளது.