செங்கல்பட்டு மாவட்டத்தில் இரண்டு கார் ஒன்றுக்கொன்று மோதி ஏற்பட்ட விபத்தில் இருவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள பெரிய நத்தம் பகுதியில் அஜய் என்பவர் வசித்து வந்துள்ளார்.இவர் தனது நண்பரான புலிப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த பிரேம்குமார், அப்துல்ரசாக் மற்றும் அவரது மனைவி ஸ்வேதா ஆகியோருடன் ஒன்று சேர்ந்து செங்கல்பட்டிலிருந்து சென்னைக்கு காரில் சென்றுள்ளனர். இந்நிலையில் வீட்டிற்கு திரும்பி கொண்டிருக்கும் போது மாமல்லபுரத்திலுள்ள கிழக்கு கடற்கரை சாலையில் காரில் வந்து கொண்டிருந்தனர். அப்போது கார் வளைவில் திரும்ப முயன்ற போது புதுச்சேரியிலிருந்து சென்னை நோக்கி வந்த கார் அஜய்யின் கார் மீது எதிர்பாரத விதமாக மோதியதில் சாலையோர பள்ளத்தில் கார் கவிழ்ந்து விட்டது.
இந்த விபத்தில் காரில் இருந்த பிரேம்குமார், அஜய் இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இதுக்குறித்து தகவலறிந்தபோலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்தில் காயமடைந்த அப்துல்ரசாக் மற்றும் ஸ்வேதா ஆகிய இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதனையடுத்து விபத்தில் இறந்த பிரேம்குமார், அஜய் இருவரையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். இதுக்குறித்து போலீசார் விபத்தை ஏற்படுத்திய கார் டிரைவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.