Categories
சினிமா தமிழ் சினிமா

செல்ஃபி எடுக்க ஓடி வந்த ரசிகர்…. கண்டித்த கவர்ச்சி நடிகை…!!!

பிரபல கவர்ச்சி நடிகை தன்னுடன் செல்ஃபி எடுக்க வந்த ரசிகரை கண்டித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் வெளியான என் சகியே, முத்திரை ஆகிய படங்களில் நடனம் ஆடி இருப்பவர்தான் பிரபல கவர்ச்சி நடிகை ராக்கி சாவந்த். இவர் அடிக்கடி சில சர்ச்சைகளிலும் சிக்கி வருகிறார். இவருக்கும் லண்டனில் உள்ள ஒரு தொழில் அதிபருக்கும் சில நாட்களுக்கு முன்பு திருமணம் ஆனது. இதை தொடர்ந்து இவர் தற்போது மும்பையில் வசித்து வருகிறார்.

இந்நிலையில், ரசிகர் ஒருவர் ராக்கி சாவந்த்தை பார்த்து ஓடி வந்து அவருடன் செல்ஃபி எடுக்க முயற்சி செய்துள்ளார். அப்போது அந்த ரசிகர் முக கவசம் அணியாததால், ராக்கி சாவந்த் தன்னுடன் செல்பி எடுக்க உங்களால் முடியாது என்று மறுத்துள்ளார்.

மேலும் உங்களைப் போன்றவர்களால் தான் மும்பையில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது என்று கடுமையாக கண்டித்துள்ளார். கடந்த சில நாட்களாக மும்பையில் உள்ள பாலிவுட் நடிகர்கள் பலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |