கடவுள் பேசுவது போல புதிதாக உருவாக்கப்பட்ட கொரோனா விழிப்புணர்வு நாடகம்.
அரியலூர் மாவட்டம் செந்துறை சேர்ந்த பள்ளி மாணவர்களான அண்ணன் தங்கையின் கொரோனா விழிப்புணர்வு குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஏழாம் வகுப்பு மாணவன் யோகீஸ்வரன் நான்காம் வகுப்பு மாணவி யோக ஸ்ரீ இருவரும் கடவுளும் பக்தனும் பேசுவதாக கொரோனா விழிப்புணர்வு நாடகத்தில் நடித்துள்ளனர். அதில் அரசு சொல்வதை கடைப்பிடித்தாலே கொரோனா பரவலை தடுக்க முடியும் என்று கடவுளே சொல்வதுபோல் இந்த நாடகம் உருவாக்கப்பட்டுள்ளது.
அதில் பக்தர் வேடமளித்த அண்ணன் எல்லோருக்கும் நல்லதே நடக்க வேண்டும் தாயே என்று கூறியதற்கு கடவுள் வேடமளித்த தங்கை பக்தா என் கையில் ஒன்றுமில்லை, அரசு ஆணையின்படி உங்களை நீங்கள் தான் பார்த்துக்கொள்ள வேண்டும். முகக்கவசம் அணிந்து கொள்ளுங்கள், பாதுகாப்பாக இருங்கள், பொது இடங்களில் எச்சில் துப்பாதீர்கள், கூட்டமாக செல்வதை தவிர்க்குமாறு அவர் கூறினார்.