திண்டுக்கல்லில் சுமை தூக்கும் தொழிலாளி ஒருவர் லாரி மோதி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சின்ன அய்யன் குளம் பகுதியில் மனோகரன் என்பவர் வசித்து வந்தார். இவர் சுமைதூக்கும் தொழில் செய்து வந்துள்ளார். இந்நிலையில் இவர் திண்டுக்கல்-பழனி சாலையில் முருகபவனம் அருகே நேற்று முன்தினம் நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த லாரி ஒன்று எதிர்பாராதவிதமாக மனோகரன் மீது வேகமாக மோதியது. அதில் அவர் பலத்த காயங்களுடன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து திண்டுக்கல் காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.