Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

முன்விரோதத்தால் ஏற்பட்ட தகராறு… பள்ளி மாணவனுக்கு அரிவாள் வெட்டு… திண்டுக்கல்லில் பரபரப்பு..!!

திண்டுக்கல்லில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் பள்ளி மாணவன் அரிவாளால் தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஆரியநல்லூரில் நிக்சன்பால் என்பவர் வசித்து வருகிறார். இவர் திமுக நிர்வாகி. அதே பகுதியில் வசித்து வரும் அதிமுகவைச் சேர்ந்த அலெக்ஸ் என்பவருக்கும் இவருக்கும் இடையே தேர்தல் தொடர்பாக முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் அலெக்ஸ், நிக்சன்பால் ஆகிய இரு தரப்பினருக்கும் அலெக்ஸ் வீட்டின் அருகே இடையே திடீரென மோதல் ஏற்பட்டுள்ளது. அதில் கம்பி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் ஒருவரையொருவர் தாக்கியதாக கூறப்படுகிறது. இந்த மோதலில் பதினொன்றாம் வகுப்பு படிக்கும் அலெக்ஸின் மகன் இன்பெண்ட் தலையில் அரிவாளால் தாக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து இந்த மோதலில் காயமடைந்த பவுல்ராஜ், இன்பெண்ட் உட்பட 3 பேர் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து சின்னாளப்பட்டி காவல் நிலையத்தில் இன்பெண்ட் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் சவரிமுத்து, நிக்சன்பால், பவுல்ராஜ் உள்பட 8 பேர் மீதும் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அதேபோல் பவுல்ராஜ் கொடுத்த புகாரின் பேரில் அலெக்ஸ் உட்பட 8 பேர் மீது காவல் துறையினர் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |