பழனி முருகன் கோவிலில் இன்று முதல் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்தவர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படுகிறது
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்றின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதனால் தமிழக அரசு இதுவரை தளர்த்தப்பட்டு இருந்த கட்டுப்பாடுகளை மீண்டும் செயல்படுத்தி உள்ளது. இந்நிலையில் இன்று முதல் பழனி முருகன் கோவிலில் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்த பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படுகிறது.
ஒரு மணி நேரத்திற்கு ஆயிரம் பக்தர்கள் மட்டுமே கோவிலுக்குள் அனுமதிக்க படுவதாகவும் இரவு 7 மணிக்கு மேல் தரிசனத்திற்கு யாருக்கும் அனுமதி இல்லை என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும் 10 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள், 65 வயதுக்கு மேற்பட்ட பெரியவர்கள் மற்றும் நோய்வாய்ப்பட்டவர்கள் கோவிலுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.