பிரிட்டன் இளவரசர் பிலிப் தனது திருமணத்தின் போது நான் முட்டாளா இல்லை தைரியமானவனா என்று கேள்வி எழுப்பியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
பிரிட்டன் மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் கணவர் இளவரசர் பிலிப் தனது திருமணத்தின் போது ஒரு கேள்வியை எழுப்பியதாக தகவல் வெளியாகியுள்ளது. இளவரசர் பிலிப் மகாராணியை திருமணம் செய்யும்போது ஒரு சொந்த வீடு கூட இல்லாதவர் என்றும் அப்போது அவர் கடற்படையில் பணியாற்றி வந்துள்ளார் என்றும் தனக்கு ஒரு முகவரி கூட இல்லை என்று கவலை கொண்டுள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இளவரசர் பிலிப் 1947 நவம்பர் மாதம் இளவரசி எலிசபெத் திருமணம் செய்து கொண்ட காலத்தில் பண நெருக்கடி தொடர்ந்துள்ளது.
ஐரோப்பாவில் 1945-ஆம் ஆண்டு போர் முடிந்திருந்தது அதனால் அவர்களின் திருமணம் மிகவும் எளிமையாகவே நடைபெற்றது. இளவரசி எலிசபெத்தை திருமணம் செய்து கொள்ளும் போது அவர் அணிந்திருந்த உடையின் விலை 12௦௦ பவுண்டுகள் என்றும் மொத்தமாக 150 விருந்தினர்களை மட்டுமே கொண்டு எலிசபெத்தின் திருமணம் நடந்துள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இளவரசர் பிலிப் திருமணம் செய்துகொண்ட பிறகு தமது புகைப்பழக்கத்தை கைவிட்டுள்ளார் இதனால் அவர் தான் முட்டாள்தனமானவனா இல்லை தைரியமானவனா என்ற கேள்வியை கேட்டதாக பாட்ரிசியா மவுண்ட்பேட்டன் குறிப்பிட்டுள்ளார்.