Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

100 அடி உயரத்துல பறக்க விட்டுருக்காங்க…. புதிய ரயில்வே நிலையம்…. காஞ்சிபுரம் மாவட்டம்….!!

காஞ்சியில் புதிய ரயில்வே நிலையம் முன்பு 100 அடி அளவிலான கம்பத்தில் தேசியக் கொடியை பறக்க விட்ட சம்பவம் அனைவருக்கும் பரவசத்தை ஏற்படுத்தியுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் அரசு மருத்துவமனைக்கு வழியாக வையாவூர் போகும் ரோட்டில் பழைய ரயில்வே நிலையம் அமைந்துள்ளது. இந்நிலையில் காஞ்சிபுரத்திலிருக்கும் பொன்னேரிக்கரையில் புதிய ரயில்வே நிலையம் அமைக்கப்பட்டது. இந்த ரயில்வே நிலையத்திற்கு முன்பாக தென்தமிழக ரயில்வேயின் உயர் அதிகாரிகள், இந்த ரயில்வே நிலையத்திற்கு முன்பாக 100 அடி அளவிலான கம்பத்தில் தேசிய கொடியை பறக்க விட வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தனர்.

அதன்படி தேசிய கொடி 40 க்கு 20 என்ற அளவில் உருவாக்கப்பட்டு, புதிய ரயில்வே நிலையம் முன்பு 100 அடி உயரம் இருக்கும் கம்பத்தில் பறக்கவிடப்பட்டுள்ளது. இது பொதுமக்கள் அனைவரையும் பரவசப்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |