Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

பிரசித்தி பெற்ற கோவில்ல இவ்ளோ கிடச்சிருக்கு…. அறநிலை துறை அதிகாரி மேற்பார்வை…. காஞ்சிபுரம் மாவட்டம்….!!

காஞ்சிபுரத்தில் இருக்கும் கோவில் உண்டியலில் போடப்பட்டிருக்கும் காணிக்கையை அறநிலை துறையினர் தலைமையில் எண்ணபட்டது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற கச்சபேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இதனை சுற்றியுள்ள மக்கள் அனைவரும் இக்கோவிலில் அமைந்திருக்கும் மூலவரான சிவபெருமானை தினமும் தரிசனம் செய்வது வழக்கம். அப்போது பொதுமக்கள் மூலவரை தரிசனம் செய்துவிட்டு அக்கோவிலில் இருக்கும் 4 உண்டியல்களில் ஏதேனும் ஒன்றில் தங்களால் முடிந்த காணிக்கையை போடுவார்கள்.

இந்நிலையில் அக்கோவிலில் இருக்கும் 4 உண்டியல்களையும் அறநிலைத்துறையின் உதவி ஆணையரான ஜெயா தலைமையிலான குழுக்கள் எண்ணியுள்ளது. இதில் 5,57,540 ரூபாயும், 21 கிராம் தங்கமும், 145 கிராம் வெள்ளியும் போடப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.

Categories

Tech |