தற்போது எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் பலன் அளிக்கவில்லை என்றால் கூடுதல் கட்டுப்பாடு விதிக்கப்படும் என்று தமிழக அரசு எச்சரித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகின்றது. இவற்றைக் கட்டுக்குள் கொண்டுவர மாநில அரசு பல்வேறு கட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. முக கவசம் அணிதல், சமூக இடைவெளியை பின்பற்றுதல், மாஸ்க் அணியாதவர்களுக்கு அபராத கட்டணம் போன்றவற்றையும் விதித்து வருகின்றது. இருப்பினும் கொரோனா அதிகரித்துக் கொண்டே வருவதால் தமிழக அரசு ஊரடங்கு குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றது.
கொரோனா கட்டுப்பாட்டுக்குள் வரவில்லை எனில் இரவு நேர ஊரடங்கு விதிக்க நேரிடும் என தமிழக அரசு எச்சரித்துள்ளது. மேலும் கொரோனாவை தடுக்க தற்போது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் பலன் தரவில்லை என்றால் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும். ஏப்ரல் 14 முதல் 16 வரை தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி திருவிழா நடத்தப்படும் என்று தெரிவித்துள்ளது.