உலகப் பொருளாதார வளர்ச்சிக்கு இந்தியாவும் காரணம் என்று உலக வங்கி தலைவர் டேவிட் மல்பாஸ் நிருபர்களுக்கு பேட்டி அளித்துள்ளார்.
வளர்ந்து வரும் நாடுகளின் முதலீட்டுத் திட்டங்களுக்கு கடன்கள் வழங்கும் ஒரு பன்னாட்டு நிறுவனமான உலக வங்கியும் மற்றும் சர்வதேச நிதியத்தின் வருடாந்திர கூட்டம் நேற்று ஐக்கிய அமெரிக்க மாநிலங்களில் ஒன்றான வாஷிங்டனில் தொடங்கியது. இக்கூட்டத்தில் பங்கேற்ற உலக வங்கி தலைவர் டேவிட் நிபுணர்களுக்கு பேட்டி ஒன்றினை அளித்துள்ளார்.
அதில் கடந்த ஒரு வருட காலமாக கொரோனா பாதிப்பு காரணமாக ஏற்றத்தாழ்வு அதிகரித்து வருவது வேதனை அளிக்கின்றது. குறிப்பாக, கொரோனா தடுப்பூசி போடுவதற்கு அதிக ஏற்றத் தாழ்வு நிலை நிலவுகின்றது. நடுத்தர குடும்பத்தின் வருவாய் உயரவில்லை என்றும் இன்னும் குறையக்கூடும் என்றும் ஏழை நாடுகளில் வட்டி விகிதம் அதிகமாக உள்ளது என்று கூறுகிறார்.
இந்த வேதனையிலும் உலகப் பொருளாதாரம் அதிவேகமான வளர்ச்சி கண்டு வருவது ஒரு நல்ல செய்தியாகும். இதற்கு அமெரிக்கா, சீனா, இந்தியா ஆகிய நாடுகள் மீண்டும் வருவது தான் முக்கிய காரணம் என்று வங்கி தலைவர் டேவிட் மல்பாஸ் கூறுகின்றார்.