புதுச்சேரியில் வில்லியனூர் திருக்காமீஸ்வரர் கோவில் தேரோட்டத்தில் முதல் அமைச்சர் நாராயணசாமி கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தார்.
புதுச்சேரியில் 12 நாட்கள் நடைபெறும் பழமை வாய்ந்த வில்லியனூர் திருக்காமீஸ்வரர் கோவில் திருவிழா அப்பகுதியில் மிகவும் பிரபலமானது. கடந்த ஜூலை 25ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய இவ்விழாவின் முக்கிய நிகழ்வான ஆடிப்பூரத் திருவிழா இன்று நடைபெற்றது.
இதில் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி கலந்துகொண்டார். பின் சுவாமி தரிசனம் செய்த அவர் தேரை வடம்பிடித்து இழுத்து தொடங்கி வைத்தார். விழாவில் அவருடன் சேர்ந்து பள்ளி மாணவர்கள் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து நான்கு மாட வீதிகள் வழியாக இழுத்துச் சென்றனர்.