Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

எங்களுக்கு பாதுகாப்பு குடுங்க..! காவல் நிலையத்தில் தஞ்சமடைந்த காதல் ஜோடி… திண்டுக்கல்லில் பரபரப்பு..!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வடமதுரை காவல் நிலையத்தில் காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள எஸ்.புதுப்பட்டியில் ரம்யா (21) என்பவர் வசித்து வருகிறார். இவர் நர்சிங் படிப்பை முடித்து விட்டு அதன் பின் வீட்டில் இருந்துள்ளார். அதே பகுதியில் விக்னேஷ் (26) என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் நிதி நிறுவனம் ஒன்றில் சென்னையில் பணிபுரிந்து வருகிறார். ரம்யா, விக்னேஷ் இருவரும் ஒரே பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பதால் இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. அது நாளடைவில் காதலாக மாறியுள்ளது. இவர்களது பெற்றோர் இந்த காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இதன் காரணமாக இரண்டு பேரும் வீட்டை விட்டு வெளியேறி திண்டுக்கல் அருகே உள்ள ஒரு கோவிலில் திருமணம் செய்துள்ளனர். அதன்பின் காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு வடமதுரை காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். இதையடுத்து காவல்துறையினர் இருதரப்பு பெற்றோர்களையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் அவர்களுக்கு உடன்பாடு இல்லை. ஆனால் காதல்ஜோடி மேஜர் என்பதால் அவர்கள் விருப்பம் போல் வாழ்ந்து கொள்ளலாம் என்று கூறி காவல்துறையினர் அவர்களை அனுப்பி வைத்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Categories

Tech |