Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 4 நாட்கள் தொடர் மழை… வானிலை மையம் அலெர்ட்…!!!!

வளிமண்டல சுழற்சி காரணமாக 9 முதல் 12-ம் தேதி வரை  தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக, சென்னை வானிலை ஆய்வு மையத்தின் இயக்குநர் புவியரசன் கூறுகையில், “8-ம் தேதி தமிழகம் மற்றும் புதுவை, காரைக்காலில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.

9 முதல் 12-ம் தேதி வரை இலங்கை மற்றும் அதனை ஒட்டிய கடற்பகுதியில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்களில் மற்றும் தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய இலேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னையை பொறுத்துவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவும் மேகமூட்டத்ததுடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 35 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்” என்று அவர்  தெரிவித்துள்ளார்.

Categories

Tech |