Categories
உலக செய்திகள்

யாரோ துப்பாக்கியோடு விரட்டுவதாக குழந்தையுடன் ஓடிய பெண்.. காவல்துறையினர் வனப்பகுதியில் பார்த்த காட்சி..!!

அமெரிக்காவில் வனப்பகுதியில் ஒரு பெண் தன்னை துப்பாக்கியுடன் யாரோ துரத்துவதாக கூறிக்கொண்டு கையில் குழந்தையுடன் ஓடிச்சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

அமெரிக்காவில் நேற்று காலை 8:30 மணிக்கு கையில் குழந்தையுடன் ஒரு பெண் வனப்பகுதியில் தன்னை ஒருவர் துப்பாக்கியோடு விரட்டி வருவதாக கூறிக்கொண்டு ஓடியுள்ளார். இதனை பார்த்த அந்த பகுதி மக்கள் உடனடியாக கலிபோர்னியாவின் ஓக்லாண்ட் பகுதி காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

இதனைத்தொடர்ந்து காவல்துறையினர் வனப்பகுதியில் தேடிப் பார்த்தபோது ஒரு புதருக்குள் அந்த பெண் மறைந்திருந்துள்ளார். அப்போது அந்த பெண்ணின் கையில் குழந்தை இல்லை. இதனால் காவல்துறையினர் குழந்தையை தேடியுள்ளனர். இதற்காக சுமார் 13 காவல்துறை வாகனங்கள், மோப்ப நாய்கள் மற்றும் ட்ரோன்களுடன் குழந்தையை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

அதனைத்தொடர்ந்து சில மணி நேரங்களுக்குப் பிறகு Orion பகுதியிலிருக்கும் அந்த வனப்பகுதியில் ஒரு நதியின் அருகில் 4 மாத குழந்தை ஒன்று காவல்துறையினரால் கண்டறியப்பட்டுள்ளது. உடனே ஓடிச்சென்று குழந்தையை காவல்துறையினர் தூக்கி வந்துள்ளனர்.

இதுகுறித்து காவல்துறை தெரிவித்துள்ளதாவது, அந்த குழந்தை குளிரினால் hypothermia  பிரச்சனை ஏற்பட்ட நிலையில்தான் கண்டறியப்பட்டது. எனவே தற்போது குழந்தை  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது. மருத்துவர்கள் குழந்தை நன்றாக குணமடைந்து விடும் என்று கூறினார்கள் என்று தெரிவித்திருக்கிறார்.

இதனிடையே அந்தப்பெண் கூறியது உண்மை அல்ல என்று காவல்துறையினர் கூறுகின்றனர். மேலும் அவர் மருந்துபொருள் ஏதோ ஒன்றினை போதை பொருள் போன்று பயன்படுத்தி இருப்பார் என்றும் கருதுகின்றனர். மேலும் குழந்தையை ஆபத்தான நிலையில் வனப்பகுதியில் தனியே போட்டுவிட்டு சென்றதால் அவரை கைது செய்யும் முயற்சியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

Categories

Tech |