Categories
சினிமா தமிழ் சினிமா

50% இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி… ‘கர்ணன்’ ரிலீஸ் தேதி மாற்றப்படுமா?… தயாரிப்பாளர் வெளியிட்ட பதிவு…!!!

தனுஷின் கர்ணன் திரைப்படம் ரிலீஸ் குறித்து தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது . இதனால் தமிழக அரசு ஒரு சில கட்டுப்பாடுகள் விதித்துள்ளது. இதில் திரையரங்குகளில் 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி என்ற கட்டுப்பாடும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே நாளை ரிலீசாக இருக்கும் நடிகர் தனுஷின் ‘கர்ணன்’ படத்தின் ரிலீஸ் தேதி மாற்றப்படுமா? என்ற கேள்வி எழுந்தது.

இந்நிலையில் இதுகுறித்து கர்ணன் பட தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு தனது டுவிட்டர் பக்கத்தில் ‘அரசு அறிவித்துள்ள 50% இருக்கைகள் அனுமதி என்ற கட்டுப்பாட்டில் கர்ணன் திரைப்படம் நாளை ரிலீஸாகும். அனைத்து விதமான பாதுகாப்பு நடவடிக்கைகளும் திரையரங்குகளில் கடைபிடிக்கப்படும்’ என பதிவிட்டுள்ளார். இதனால் நாளை கர்ணன் திரைப்படம் திட்டமிட்டப்படி வெளியாகும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

Categories

Tech |