குக் வித் கோமாளி கன்னட ரீமேக் நிகழ்ச்சியில் செஃப் வெங்கடேஷ் பட் கலந்துகொண்டுள்ளார்.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் போட்டியாளர்கள் கோமாளி வைத்துக்கொண்டு சமையல் செய்ய படாதபாடு படும் காட்சிகள் ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைக்கிறது. இந்த நிகழ்ச்சியின் முதல் சீசன் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து இரண்டாவது சீசன் கலகலப்பாக நடைபெற்று வந்தது. முதல் சீஸனில் கோமாளிகளாக வந்த பாலா, புகழ், சிவாங்கி, மணிமேகலை ஆகியோர் இந்த சீசனிலும் கோமாளிகளாக கலக்கி வருகின்றனர். மேலும் இந்த நிகழ்ச்சியின் கிராண்ட் பினாலே வருகிற ஏப்ரல் 14ம் தேதி தமிழ்ப் புத்தாண்டு அன்று மதியம் 2 மணி முதல் ஒளிபரப்பாக இருக்கிறது.
தற்போது தமிழில் சூப்பர் ஹிட் அடித்த இந்த நிகழ்ச்சி கன்னடத்தில் குக் வித் கிறுக்கு என்ற பெயரில் ரீமேக் செய்யப்படுகிறது. சமீபத்தில் இதற்கான புரோமோ வெளியாகியிருந்தது. இந்நிலையில் குக் வித் கிறுக்கு நிகழ்ச்சிக்கு செஃப் வெங்கடேஷ் பட் நடுவராக இருந்து சிறப்பிக்கவுள்ளார். இதனை செஃப் வெங்கடேஷ் பட் தனது சமூக வலைதளப் பக்கத்தில் அறிவித்துள்ளார். இதனால் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.