இனம்புரியாத பயம் நீங்கி, வாழ்வில் தெளிவு மற்றும் மகிழ்ச்சி உண்டாக சாய் பாபாவின் இந்த மந்திரத்தை உச்சரித்தால் போதும்.
மனிதனுடைய வாழ்க்கையில் பல ஏற்ற இறக்கங்கள் நிறைந்து காணப்படுகின்றது. நாம் எவ்வளவு முயற்சி செய்தாலும் கடவுளின் அனுகிரகம் நமக்கு கிடைக்க வேண்டுமென்றால் நாம் இறைவனை மனதார பிரார்த்தனை செய்ய வேண்டும். மேலும் பலர் தன்னுடைய வாழ்வில் மகிழ்ச்சி நிரம்பவில்லை என புலம்பி தவிப்பதை கேட்டிருக்கிறோம். அவ்வாறு புலம்புபவர்களுக்கு மனக்கவலை நீங்க, வாழ்வில் மகிழ்ச்சி நிரம்ப, நிம்மதி பெருக சாய்பாபாவின் இந்த மந்திரத்தை உச்சரியுங்கள்.
“ஓம் சாய் குருவாயே நமஹ ஓம் ஷீரடி தேவாயே நமஹ ஓம் சர்வ தேவ ரூபாயே நமஹ”
இந்த மந்திரத்தை தினமும் காலையில் எழுந்து குளித்துவிட்டு சாய்பாபாவின் திருவுருவ சிலை அல்லது படத்தின் முன்பாக நின்று 9 முறை கூறவேண்டும். மேலும் ஒவ்வொரு வியாழக்கிழமையும் சாய்பாபாவின் படத்திற்கு முன்பாக கற்கண்டு அல்லது முந்திரிப்பருப்பு படைத்து இந்த மந்திரத்தை 108 முறை சொல்லி பிராத்தனை செய்ய வேண்டும். அவ்வாறு செய்வதினால் உங்கள் மனதில் ஏற்பட்டிருக்கும் இனம்புரியாத பயம் அடியோடு நீங்கி குடும்பத்திற்கு மகிழ்ச்சி உண்டாகும் என்பது ஐதீகம்.