கமலின் “விக்ரம்” படத்தில் யார் வில்லனாக நடிக்கப் போகிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
மாநகரம், கைதி, மாஸ்டர் என ஹிட் படங்களை கொடுத்து தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக இருப்பவர் லோகேஷ் கனகராஜ். இவர் அடுத்ததாக கமல் நடிப்பில் “விக்ரம்” என்ற படத்தை உருவாக்க உள்ளார் என்று தகவல் வெளியானது. ஆனால் கமல் அரசியலில் பிஸியாக இருந்து வருவதால் இப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் தொடங்கப்படவில்லை.
இதற்கிடையில் இப்படத்தில் கமலுக்கு வில்லனாக யார் நடிக்கப் போகிறார் என்ற கேள்வி நிலவி வந்தது. அதற்கு தற்போது பதில் கிடைத்துள்ளது. அதன்படி வேலைக்காரன் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு வில்லனாக நடித்த பகத் பாசில் தான் இப்படத்தில் கமலுக்கு வில்லனாக நடிக்க உள்ளார் என்று தெரியவந்துள்ளது.
இதனை அவரே சமீபத்திய பேட்டியில் உறுதி செய்துள்ளார். அப்போது இதுகுறித்து அவர் கூறியதாவது, இப்படத்தில் தான் ஒரு அரசியல்வாதியாக நடிக்க இருப்பதாகவும், இப்படத்தில் தனது கதாபாத்திரம் மிகவும் பிடித்திருந்ததால் உடனே சம்மதம் தெரிவித்ததாகவும் கூறினார்.