குக் வித் கோமாளி சீசன் 3 எப்போது தொடங்கும் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல நிகழ்ச்சிகளில் ஒன்று குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போட்டியாளர்கள் கோமாளிகளை வைத்துக்கொண்டு சமையல் செய்யப் படாத பாடு படும் காட்சிகள் ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைக்கிறது. இந்த நிகழ்ச்சியின் முதல் சீசன் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து இரண்டாவது சீசன் மிக கலகலப்பாக நடைபெற்று வந்தது. தற்போது இரண்டாவது சீசன் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.
இந்த நிகழ்ச்சி முடிவடைவது ரசிகர்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த சீசனின் வெற்றியாளர் யார்? என்பதை காண ரசிகர்கள் மிகுந்த ஆவலில் உள்ளனர் . இந்நிலையில் குக் வித் கோமாளி சீசன் 3 எப்போது தொடங்கும் என்பது குறித்து செஃப் தாமு பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். அதில் அவர் வருகிற ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதம் தொடங்க இருப்பதாகவும் கோமாளிகளில் எந்த மாற்றமும் இல்லை என்றும் கூறியுள்ளார் . இதனால் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.