Categories
உலக செய்திகள்

உடல்நலம் பாதித்த தாய்…. சாதகமாகப் பயன்படுத்திய மகன்…. நீதிமன்றத்தின் அதிரடித் தண்டனை….!!

பிரிட்டனில் தன் தாயின் பணத்தை சூதாட்டத்திற்கு செலவழித்த மகனுக்கு நீதிமன்றம் தண்டனை வழங்கியுள்ளது.

பிரிட்டனில் ரூபர்ட் கிளார்க் என்பவர் தன் தாய் ஜெனட்(92) உடன் வசித்து வருகிறார். ஜெனட் பெரிய கோடிஸ்வரர் வீட்டு பெண் என்பதால் அவரின் பெயரில் நிறைய சொத்துக்கள் இருந்தன.அவர் வயது மற்றும் பல்வேறு நோயால் பாதிக்கப்பட்டு ஓய்வில் இருந்ததால் சொத்துக்களை கவனிக்கும் முழு பொறுப்பும் அவரின் மகனான ரூபர்ட்க்கு வந்தது. இதனால் 70,000 டாலர் பணத்தை சூதாட்டத்திற்கும் பாலியல் தொழிலாளர்களிடம் கொடுத்து செலவு செய்துள்ளார்.மேலும் 14,500 டாலர் பணத்தை 5 ரோமானியா பெண்களுக்கும் கொடுத்துள்ளார்.

இதன் காரணமாக கடந்த 2019 ஆம் ஆண்டு ஜனவரி முதல் மே வரை பலமுறை வங்கிகளில் பணத்தை எடுத்துள்ளார். இதுதொடர்பாக வங்கி சார்பில் அவரது மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த வின்செஸ்டர் கிரவுன் நீதிமன்றம் தன் தாயின் உடல் நிலையை உபயோகப்படுத்தி மோசடி செய்த குற்றத்திற்காக 22 மாத சிறைத்தண்டனையையும், 150 மணி நேரம் எந்த ஊதியமின்றி பணிபுரியவும் உத்தரவிட்டுள்ளது.

Categories

Tech |