தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நேற்று முடிவடைந்தது. மக்களும் ஆர்வமுடன் வந்து தங்களுடைய ஜனநாயக கடமையை நிறைவேற்றினர். இதையடுத்து தமிழகம் முழுவதுமாக 72.78% வாக்குகள் பதிவானது. இதனை தொடர்ந்து வாக்கு இயந்திரங்களுக்கு சீல் வைக்கப்பட்டு வாக்கு என்னும் மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இந்நிலையில் மே 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை முடிந்து அறிவிப்பு வரும் வரை வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைத்துள்ள மையங்களை 24 மணி நேரமும் கண்காணிக்க வேண்டும் என்று இபிஎஸ் ஓபிஎஸ் அறிவுறுத்தியுள்ளனர். அதிமுக கூட்டணி கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகளும் கவனக்குறைவாக இருக்காமல் மிகுந்த எச்சரிக்கையுடனும், விழிப்புணர்வுடனும் இரவு பகல் பாராமல் சுழற்சி முறையில் கண்காணிக்க வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளனர்.