மதுரையில் முதியவர் மரத்தில் தூக்கினை போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டம் சோழவந்தானில் சி.புதூர் என்ற அழகான கிராமம் உள்ளது. இக்கிராமத்தில் 75 வயதுடைய முதியவரான ஆறுமுகம் என்பவர் வசித்து வந்தார். இவருக்கு சந்தானம் என்ற மகன் உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ஆறுமுகம் மயானத்திலிருக்கும் மரத்தில் திடீரென்று தூக்கினை போட்டு தற்கொலை செய்துள்ளார்.
இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அவரது மகன் சந்தானம் கதறி அழுதார். இதனையடுத்து சந்தானம் சி.புதூர் காவல்நிலையத்தில் இச்சம்பவம் குறித்து புகார் கொடுத்தார். அப்புகாரை ஏற்ற சப்-இன்ஸ்பெக்டரான விஜயபாஸ்கர் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்.