கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட நடிகர் பார்த்திபனுக்கு கண், காது, முகம் முழுவதும் வீங்கி விட்டதாக கூறியுள்ளார்.
சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிராக தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வந்த நிலையில், கொரோனா தடுப்பு ஊசி மக்கள் பயன்பாட்டுக்கு வந்துவிட்டது. இந்தியா கண்டறிந்துள்ள கொரோனா தடுப்பு ஊசிகள் உலக நாடுகள் அனைத்திற்கும் வினியோகம் செய்யப்பட்டு வருகின்றன. இருந்தாலும் மக்கள் அனைவரும் கொரோனா தடுப்பு ஊசி போட்டுக் கொள்வதற்கு மிகவும் அச்சப்படுகிறார்கள்.
தற்போது நாடு முழுவதும் அனைத்து தரப்பினருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் இரண்டாம் தவணை கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொண்ட எனக்கு திடீரென ஏற்பட்ட ஒவ்வாமையில் கண் காது முகம் முழுவதும் வீங்கிவிட்டது. டாக்டருக்கு போட்டோ அனுப்பியே மருத்துவம் செய்து கொண்டேன் என்று நடிகர் பார்த்திபன் தெரிவித்துள்ளார். மேலும் மிகச் சிலருக்கு மட்டும் இதுபோன்ற reaction. அதுவும் எனக்கு ஏற்கனவே allergy issues இருந்ததால் மட்டுமே trigger ஆனது என அவர் தெரிவித்துள்ளார். இது மக்கள் மத்தியில் ஒரு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.