கிருஷ்ணகிரியில் , புதிய கற்கால மற்றும் பழங்கற்கால தொல்லியல் பொருட்கள் அகப்ப்பட்டுள்ளன.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ,பர்கூர் தாலுகாவில் அமைந்துள்ளது குட்டூர் கிராமம். இங்கே கிருஷ்ணகிரி அருங்காட்சியகம் மற்றும் அரசு ஆடவர் கலைக்கல்லூரி வரலாற்று துறை பேராசிரியர் வெங்கடேஸ்வரன் மற்றும் ஆய்வு மாணவர்கள் இணைந்து புதிய கற்கால, பழங்கற்கால தொல்பொருட்களை கண்டுபிடித்துள்ளனர்.
பானை செய்யவும், மெருகேற்றவும் பயன்படுத்தும் சுடுமண் கட்டி, தட்டும் கருவிகள், ரசகோட்டப்பானை ஓடுகள், பானை ஓடுகள்,கறுப்பு பானை மூடிகள், நீண்ட பிடியுடன் கூடிய சிகப்பு பானை மூடிகள் போன்றவை சிக்கியுள்ளன.மேலும் புதிய கற்காலத்தை சேர்ந்த கல் கருவிகள்,அலங்கார வேலைப்பாடு கொண்ட சிகப்பு பானை ஓடுகள், சோழர் கால நாணயம் போன்ற பல பொருட்கள் கிடைத்துள்ளன.