பாண்டியன் ஸ்டோர் சீரியல் ஃப்ளாஷ்பேக் காட்சி உறுதி செய்யும் வகையில் புகைப்படம் வெளியாகி உள்ளது.
வீட்டில் இருக்கும் இல்லத்தரசிகளுக்கு அவர்களது பொழுதுபோக்காக இருப்பது சீரியல்கள் மட்டுமே. அதிலும் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கென்று மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளனர். அந்த வகையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.
குடும்ப பாசம், அண்ணன், தம்பி பாசம் கொண்ட இத்தொடரில் ஃப்ளாஷ்பேக் காட்சிகள் ஒளிபரப்பாக உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு இரு சிறுவர்களின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி இவர்கள் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் ஃப்ளாஷ்பேக்கில் நடிக்க உள்ளனர் என்று தகவல் வெளியாகியது.
அதனை உறுதிப்படுத்தும் வகையில் அதே சிறுவர்கள் பாண்டியன் ஸ்டோர் குடும்பத்தினருடன் இருக்கும் புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. ஆகையால் வரவிருக்கும் ஃப்ளாஷ்பேக் காட்சிகளிளை காண்பதற்கு ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.