Categories
மாநில செய்திகள்

செல்பி எடுக்க முயன்றவரின் செல்போனை பறித்த அஜித்… வைரலாகும் வீடியோ…!!!

திருவான்மியூரில் வாக்குச்சாவடியில் அஜீத்துடன் செல்பி எடுக்க முயன்ற ரசிகரின் செல்போனை பறித்த அஜித் எச்சரித்து திரும்பக் கொடுத்தார்.

தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளில் மொத்தம் 88,937 வாக்குச் சாவடிகளில் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. 234 தொகுதிகளிலும் 3998 வேட்பாளர்கள் தேர்தல் களத்தில் உள்ளனர். கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளை முறையாக கடைப்பிடித்து உங்களது ஜனநாயகக் கடமையை நிறைவேற்றுங்கள். மேலும் பூத் ஸ்லீப் இல்லாதவர்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தாலே வாக்களிக்கலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதுமட்டுமன்றி வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்கள் வாக்களிக்க முடியாது.

அதன்படி வாக்காளர்கள் அனைவரும் வாக்கு செலுத்தி வருகிறார்கள். இந்நிலையில் தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு திருவான்மியூரில் உள்ள வாக்குச்சாவடியில் நடிகர் அஜித்குமார் மற்றும் அவரின் மனைவி முதல் ஆளாக வாக்களித்தனர். அங்கு குவிந்த ரசிகர்கள் அஜித்துடன் செல்ஃபி எடுக்க முயன்றனர். அப்போது ஒருவரது செல்போனை பறித்து, அங்கிருந்த ரசிகர்கள் அஜித் துரத்தினார். அதன்பிறகு ரசிகரின் செல்போனை பரித்த அஜித், வாக்களித்துவிட்டு வந்த பிறகு அந்த ரசிகரை அளித்த இனிமேல் இதுபோன்ற செய்ய வேண்டாம் எனக் கூறிய அந்த ரசிகரிடம் செல்போனை கொடுத்தார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Categories

Tech |