திருவண்ணாமலையில் 20 பேருக்கு காய்ச்சல் ஏற்பட்ட காரணத்தினால் அவர்களை ஓட்டு போட அனுமதிக்காமல் திருப்பி அனுப்பி வைத்தனர்.
தமிழகம் முழுவதும் இன்று காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.ஏராளமானோர் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்து தங்களது ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர். பிரபலங்கள், அரசியல் கட்சி நிர்வாகிகள் காலையிலேயே தங்களது வாக்கு பதிவினை செலுத்தி வருகின்றனர். ஓட்டு போட வருவார்கள் கட்டாயம் முக கவசம் அணிந்து வர வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் காய்ச்சல் உள்ளதா என்று சரிபார்க்கப்பட்ட பின்னரே ஓட்டுப்போட அனுமதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் திருவண்ணாமலையில் சுமார் 20 பேருக்கு காய்ச்சல் அதிகமாக இருந்ததால் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. பிபிஇ கிட் அணிந்து வந்த பிறகு ஆறு மணிக்கு பிறகே வாக்களிக்க அனுமதி என்று கூறியதால் திரும்பி சென்றுள்ளனர். காய்ச்சல், கொரோனா அறிகுறி என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.