மக்கள் நீதி மையம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தனது குடும்பத்துடன் சென்று வாக்களித்தார்.
தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளில் மொத்தம் 88,937 வாக்குச் சாவடிகளில் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. 234 தொகுதிகளிலும் 3998 வேட்பாளர்கள் தேர்தல் களத்தில் உள்ளனர். கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளை முறையாக கடைப்பிடித்து உங்களது ஜனநாயகக் கடமையை நிறைவேற்றுங்கள். மேலும் பூத் ஸ்லீப் இல்லாதவர்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தாலே வாக்களிக்கலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதுமட்டுமன்றி வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்கள் வாக்களிக்க முடியாது.
இந்நிலையில் சென்னை ஆழ்வார்பேட்டையில் மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், கொரோனா விதிமுறைகளைப் பின்பற்றி மக்களுடன் வரிசையில் நின்று வாக்களித்தார். தனது மகள்கள் ஸ்ருதி மற்றும் அக்ஷரா ஹாசனுடன் வந்து தனது ஜனநாயக கடமையை ஆற்றியுள்ளார்.