இரவில் சாப்பிட்டால் உடல் எடை அதிகரிக்கும் என பலர் கருதுகின்றனர். ஆனால் அது தவறு. நாம் இரவில் கூட கார்போஹைட்ரேட் உணவுகளை தாராளமாக சாப்பிடலாம். அது பற்றி இந்த தொகுப்பில் பார்ப்போம்.
என்ன சாப்பிட வேண்டும்:
கார்போஹைட்ரேட் என்பது நார்ச்சத்து, ஸ்டார்ச், சக்கரை ஆகிய மூலக்கூறுகளால் ஆனது. காப்ஸ் உணவுகள் என்று சொன்னதும் முதலில் நம் நினைவுக்கு வருவது வெள்ளை ரொட்டி, பாஸ்தா மற்றும் சப்பாத்தி போன்றவை. இந்த மூன்று உணவுப் பொருட்கள் மட்டுமல்ல பழங்கள், காய்கறிகள் மற்றும் விதைகள் வரை காபஸ் நிறைந்துள்ளது. நல்ல காப்ஸ் அதிக நார்ச்சத்து அளவுகளைக் கொண்ட உணவுகளை சாப்பிடுவது உடலுக்கு நன்மையை கொடுக்கும்.
கெட்ட காப்ஃபைன் நிறைந்த உணவுகளை நாம் உணவில் எடுத்துக் கொள்ளக்கூடாது. வெள்ளை சர்க்கரை, வெள்ளை ரொட்டி, கேக், பேக்கரி உணவுகளை நாம் உணவில் எடுத்துக்கொள்வது தவறானது. காய்கறிகள் பழங்கள் போன்ற பொருள்களை நாம் எடுத்துக் கொண்டால் நம் உடல் எடையும் அதிகரிக்காது. நல்ல ஊட்டச்சத்து கிடைக்கும். கார்போஹைட்ரேட் வேண்டாம் என உடனடியாக முழுவதும் ஒதுக்கிவிட முடியாது.
அதற்கு பதிலாக கார்போஹைட்ரேட் உணவுகளில் எது நல்லது என்பதை அறிந்து சாப்பிட வேண்டும். அரிசி சாதம் சாப்பிடுவதை தவிர்த்து முழு தானியங்கள், காய்கறிகள், பழங்கள், புரதச்சத்து நிறைந்த உணவுகளை உங்கள் உணவில் எடுத்துக் கொண்டால் நல்லது நடக்கும். உடல் எடையை குறைக்க நம்மில் பலரும் கஷ்டப்படுகிறோம். இதற்கு இந்த வகையான உணவுகளை நம் உணவில் சேர்த்துக் கொண்டால் உடல் எடை ஈஸியாக குறையும்.