அக்ஷய் குமாருடன் தொடர்பில் இருந்து 45 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தியா முழுவதும் தற்போது கொரோனாவின் இரண்டாம் அலை வேகமாக வீசி வருகிறது. இதில் பல திரைப்பிரபலங்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அந்தவகையில் “ராம்சேது” என்ற படத்தில் நடித்து வந்த பிரபல நடிகர் அக்ஷய் குமார்க்கு நேற்று கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில் இன்று அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதை தொடர்ந்து அவருடன் தொடர்பில் இருந்த 100 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. இதில் படக்குழுவினர் 45 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் “ராம்சேது” திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.