நடிகர் அஜித்தின் விஸ்வாசம் படத்தை தயாரித்த சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.
தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் அஜித் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படம் விஸ்வாசம். இந்த படத்தை அஜித்தின் வீரம், வேதாளம், விவேகம் ஆகிய படங்களை இயக்கிய சிவா இயக்கியிருந்தார். மேலும் இந்தப் படத்தின் பாடல்களும் செம ஹிட் அடித்தது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் இந்த படத்திற்காக இசையமைப்பாளர் டி இமானுக்கு தேசிய விருது கிடைத்தது . இதையடுத்து அஜித் -சிவா மீண்டும் இணைவார்கள் என எதிர்பார்த்த நிலையில் நடிகர் அஜித் இயக்குனர் ஹெச் வினோத் இயக்கத்தில் நேர்கொண்டபார்வை படத்தில் நடித்தார்.
The Journey of #Viswasam.#AjithKumar #Nayanthara @directorsiva @SureshChandraa @Actor_Vivek @IamJagguBhai @immancomposer @vetrivisuals @AntonyLRuben @dhilipaction @DoneChannel1 pic.twitter.com/CL0Yo5HZVV
— Sathya Jyothi Films (@SathyaJyothi) April 4, 2021
இதை தொடர்ந்து அஜித் தற்போது ஹெச் வினோத் இயக்கத்தில் வலிமை திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் அஜித்-சிவா கூட்டணியில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த விஸ்வாசம் படக்குழு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது விஸ்வாசம் படத்தின் ஆரம்பம் முதல் இறுதி வரை என்னென்ன சாதனைகள் படைத்தது என்பதை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் வீடியோவாக வெளியிட்டுள்ளது. தற்போது இந்த வீடியோ இணையத்தில் படு வைரலாகி வருகிறது.