இன்றைய காலகட்டத்தில் அனைவருமே செல்போன்களை பயன்படுத்தி வருகின்றனர். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரின் கையிலும் செல்போன் இருக்கும் காலமாக மாறிவிட்டது. இந்நிலையில் பல்வேறு வகையான தயாரிப்பு போன்களை மக்கள் உபயோகித்து வருகின்றன.ர் பல நிறுவனங்களும் புது புது மாடல்களை அறிமுகம் செய்து வருகின்றனர். அந்த வகையில் LG நிறுவனமும் ஸ்மார்ட்போன்களை தயாரித்து வந்தது.
இந்நிலையில் ஸ்மார்ட்போன்கள் தயாரிப்பு விற்பனையில் இருந்து வெளியேறுவதாக எல்ஜி நிறுவனம் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. நஷ்டத்தில் இயங்கி வந்த நிலையில் ஜூலை 31-ஆம் தேதியுடன் ஸ்மார்ட்ஃபோன் தயாரிப்பை நிறுத்துவதாக அறிவித்துள்ளது. மேலும் எதிர்காலத்தில் எலக்ட்ரிக் வாகன தயாரிப்பில் ஈடுபட திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.