ஒவ்வொரு மூலிகைப்பொடிகளிலும் உள்ள வியக்க வைக்கும் மருத்துவ குணங்கள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.
தற்போதைய காலகட்டத்தில் ஒரு சின்ன தலைவலி என்றால் கூட அனைவரும் மாத்திரையை தான் தேடுகிறார்கள். ஆனால் நம் முன்னோர்கள் காலத்தில் இயற்கை மருத்துவங்கள் அனைத்து நோய்களுக்கும் உதவின. அதனை நாம் அனைவரும் இப்போது மறந்துவிட்டோம். அவ்வாறு உடலிலுள்ள பல பிரச்சனைகளுக்கு இயற்கை மருத்துவமே மிக சிறந்தது.
அதன்படி உடலில் உள்ள பல நோய்களுக்கு மூலிகை பொடிகள் பெரிதும் பயன்படுகின்றன. மற்ற மருந்துகளை விட மூலிகை பொடிகள் அதிக பயனளிக்கும்.
அருகம்புல் பொடி: அதிக உடல் எடை, கொழுப்பை குறைக்கும், சிறந்த ரத்தசுத்தி
நெல்லிக்காய் பொடி: பற்கள் எலும்புகள் பலப்படும். வைட்டமின் சி உள்ளது.
கடுக்காய் பொடி: குடல் புண் ஆற்றும், சிறந்த மலமிளக்கியாகும்.
வில்வம் பொடி: அதிகமான கொழுப்பை குறைக்கும், இரத்த கொதிப்பிற்கு சிறந்தது.
துளசி பொடி: மூக்கடைப்பு மற்றும் சுவாசக் கோளாறுகளுக்கு சிறந்தது.