Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

தேர்தலை முன்னிட்டு… 3 நாள்கள் விடுமுறை… டாஸ்மாக் கடைகளில் குவிந்த குடிமகன்கள்..!!

தேர்தலை முன்னிட்டு மூன்று நாட்கள் விடுமுறை என்பதால் மதுபாட்டில்களை வாங்குவதற்காக டாஸ்மாக் கடையில் மது பிரியர்களின் கூட்டம் அலைமோதியது.

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வருகின்ற ஏப்ரல் மாதம் 6-ஆம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலை முன்னிட்டு மூன்று நாட்கள் தொடர்ந்து விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனால் குடிப்பதற்காக சிலர் தொடர்ந்து மூன்று நாட்களுக்கு சேர்த்து மோட்டார் சைக்கிளில் மொத்தமாக மதுபாட்டில்களை வாங்கிச் சென்றனர். சில கடைகளில் குறைந்த விலையில் இருந்த மதுபாட்டில்கள் வேகமாக விற்கப்பட்டது.

இதனால் சிலர் விலையுயர்ந்த மதுபாட்டில்களை வேறு வழியில்லாமல் வாங்கி சென்றனர். மூன்று நாட்கள் விடுமுறை என்பதால் மது பிரியர்களின் கூட்டம் மதுக்கடைகளில் அதிகமாக அளவில் இருந்தது. மேலும் அதிக அளவு மது பாட்டில்கள் தேர்தலை முன்னிட்டு முன்கூட்டியே விற்பனை ஆகி விட்டது. இதனால் விரும்பிய மதுபாட்டில்கள் மது பிரியர்களுக்கு கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது.

Categories

Tech |