Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

கடைசியா பார்க்க போனாங்க… அவங்களுக்கும் இப்படி ஆகிருச்சு…. அடுத்தடுத்த நிகழ்வுகளால் நிலைகுலைந்த குடும்பம்…!!

துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சென்ற இருவர் விபத்தில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அட்டபள்ளம் பகுதியில் சுப்பிரமணி என்ற விவசாயி வசித்து வருகிறார். இந்நிலையில் சுப்பிரமணியனின் மாமியார் இறந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சுப்பிரமணியின் உறவினரான முருகன் என்பவர் சுப்ரமணியனுடன் மோட்டார் சைக்கிளில் வடவள்ளி பகுதிக்கு சென்று உள்ளார் இதனையடுத்து சடங்குகள் முடிவடைந்த பின்னர் இரண்டு பேரும் மோட்டார் சைக்கிளில் ஊருக்கு திரும்பி உள்ளனர்.

அப்போது இவர்களின் மோட்டார் சைக்கிள் ராயக்கோட்டை தக்காளி மார்க்கெட் அருகே சென்று கொண்டிருந்தபோது, அவ்வழியாக வேகமாக வந்த கார் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த இருவரையும் அருகில் உள்ளவர்கள் மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனையில் இவர்களுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனளிக்காமல் இருவரும் பரிதாபமாக உயிரிழந்து விட்டனர். இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த ராயக்கோட்டை காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |