Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

கொஞ்ச நாளா இங்கதான் நிக்குது… திண்டுக்கல்லில் பரபரப்பு புகார்… போலீஸ் விசாரணை..!!

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே அனாதையாக நின்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிளை காவல்துறையினர் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வீலிநாயக்கன்பட்டியில் சூசை என்பவர் வசித்து வருகிறார். கடந்த மார்ச் மாதம் 31-ஆம் தேதியிலிருந்து இவருடைய தோட்டத்திற்கு அருகில் மோட்டார் சைக்கிள் ஒன்று அனாதையாக நின்று கொண்டிருந்தது. இது குறித்து காவல்துறையினருக்கு அப்பகுதியினர் தகவல் கொடுத்துள்ளனர்.

அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த நிலக்கோட்டை காவல்துறையினர் மோட்டார் சைக்கிள் குறித்து விசாரணை மேற்கொண்டனர். இதையடுத்து காவல்துறையினர் அந்த மோட்டார் சைக்கிளை கைப்பற்றினர். மேலும் மோட்டார் சைக்கிளில் இருந்த பதிவு எண்ணைக் கொண்டு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Categories

Tech |