சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காளையார்கோவிலில் புனித வெள்ளியை முன்னிட்டு ஊர்வலம் மற்றும் சிலுவை வழிபாடு நடைபெற்றது.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காலையார்கோவிலில் ஊர்வலம் மற்றும் சிலுவை வழிபாடு புனித வெள்ளியை முன்னிட்டு நடைபெற்றது. புனித வெள்ளி அன்று இயேசு கிறிஸ்து, சிலுவையில் அறையப்பட்டு உயிர் நீத்தார். அதனை நினைவு கூறும் வகையில் இயேசுவின் பாடுகள் என தூம்பா பவனியும், சிலுவை பாதையும் கிறிஸ்தவ தேவாலயங்களில் நடைபெறுவது வழக்கம். அதன்படி காளையார் கோவிலில் உள்ள புனித அருளானந்தர் ஆலயத்தில் சிலுவைபாதை நிகழ்ச்சி பங்குத்தந்தை சூசை ஆரோக்கியம் தலைமையில் நடைபெற்றது.
இதில் சிலுவையை சுமத்தல், இயேசு தீர்ப்பிடபடுதல், அவரின் இறப்பு, சிலுவையில் அறையப்படுதல், கல்லறையில் அடக்கம் செய்தல் என 14 நிலைகளாக நினைவு கூறப்பட்டன. அதனை தொடர்ந்து திருச்சிலுவை ஆராதனை, இறைவாக்கு வழிபாடு, தூம்பா பவனி, திருவிருந்து நடைபெற்றது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.