Categories
லைப் ஸ்டைல்

உடல் எடை குறைந்து, தொப்பை குறைய… இதோ எளிய டிப்ஸ்… தினமும் பாலோ பண்ணுங்க…!!!

உடலில் உள்ள கொழுப்பை கரைக்கும் தன்மைக் கொண்ட பொருட்கள் கலந்த நீரைக் குடிப்பது தொப்பையை குறைக்க உதவும்.

தற்போதைய காலகட்டத்தில் பெரும்பாலானோருக்கு மிகப்பெரிய சவாலாக இருப்பது தங்களின் உடல் எடையை குறைப்பது. உணவு பழக்கங்களில் கட்டுப்பாடு இல்லாமல் சாப்பிடுவதால் உடல் எடை அதிகமாகிறது. அதனால் சிலருக்கு தொப்பை விழுகிறது. கொழுப்பை கரைக்கும் தன்மைக் கொண்ட பொருட்களும் கலந்த நீரை குடிப்பது தொப்பையை குறைக்க மிகவும் உதவும். அதன்படி இந்த பானத்தை தினமும் குடித்து வந்தால் உங்கள் உடல் எடை குறைந்து தொப்பையும் குறையும்.

தேவையான பொருள்கள்:
தண்ணீர் – 6 கப்
தோல் நீக்கி நறுக்கிய இஞ்சி- 1 டேபிள் ஸ்பூன்.
நறுக்கிய வெள்ளரி – 1.
எலுமிச்சை- 1
புதினா இலைகள் – 1/3 கப்.

செய்முறை: ஒரு பெரிய கண்ணாடி ஜாடியில் எல்லாவற்றையும் போட்டு கலந்து இரவு முழுவதும் ஊறவிடுங்கள். அதற்கு அடுத்த நாள் காலையில் இருந்து நாள் முழுவதும் அந்த தண்ணீரை குடித்துவர வேண்டும். அப்படி இதனைத் தொடர்ந்து செய்து வந்தால் உங்கள் உடல் எடை குறைந்து தொப்பை குறையும்.

Categories

Tech |