Categories
கிரிக்கெட் விளையாட்டு

இந்திய அணியில் பிடித்த வீரர் யார் …?சவுரவ் கங்குலி சொன்னா சுவாரஸ்ய பதில் …!!!

இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவரான சவுரவ் கங்குலி இந்திய அணி வீரர்களை பற்றி பேசியுள்ளார்.

இந்திய கிரிக்கெட் வாரிய தலைவரான சவுரவ் கங்குலி பிரபல யூ டியூப் சேனல் நடத்திய நிகழ்ச்சி ஒன்றில் அவர் பங்கேற்றார். அப்போது அவரிடம் கேள்வி ஒன்று எழுப்பப்பட்டது. அதில் இந்திய அணியில்  தற்போது உங்களுக்கு மிகவும் பிடித்த வீரர் யார் என்று கேட்டுள்ளனர். இந்தக் கேள்விக்கு சவுரவ் கங்குலி பதில் அளித்துள்ளார். அவர் கூறும்போது, இந்திய அணியில் இடம்பெற்றுள்ள அனைத்து வீரர்களையும் எனக்கு பிடிக்கும் என்றும். கிரிக்கெட் வாரிய தலைவராக இருப்பதால் எனக்கு பிடித்த வீரர்களை குறிப்பிட்டு சொல்ல முடியாது .

இந்திய அணியில் பல வீரர்கள் திறமை வாய்ந்தவர்களாக உள்ளனர். அந்த வகையில் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலியின் பேட்டிங்கி மிகவும் ரசித்துப் பார்ப்பேன். இதுபோலவே ரிஷப் பண்ட் ஆட்டத்தையும் மிகவும் ஆர்வத்துடன் பார்ப்பேன் . இந்திய அணியின் ஸ்பீட் பவுலர்களான பும்ரா, முகமது ஷமி மற்றும் ஷர்துல் தாகூர் ஆகியோரின் பவுலிங் எனக்கு மிகவும் பிடிக்கும் என்றார் . இவர்கள் மூவரும் ஆட்ட நேரத்தில் இக்கட்டான சூழலில் துணிச்சலுடன் செயல்படுவார்கள் என்று இந்திய வீரர்களின் திறமையை பற்றி அவர் கூறினார்.

Categories

Tech |