சுவிற்சர்லாந்தில் இராணுவத்தில் பெண்கள் சேருவதற்கு ஆர்வம் காட்டாத நிலையில், உடைகளில் மாற்றம் கொண்டுவரப்படவுள்ளது.
சுவிட்சர்லாந்தின் ராணுவத்தில் சேருவதற்கு பெண்கள் அவ்வளவாக ஆர்வம் காட்டுவதில்லை என்று கூறப்படுகிறது. அதாவது பெண்கள் ஒரு சதவீதத்திற்கும் குறைவாகவே ராணுவத்தில் உள்ளார்கள். இதனால் தற்போது ராணுவத்தில் பெண்களை சேர்ப்பதற்கான முயற்சியில் அரசு ஈடுபட்டு வருகிறது.
இச்செய்தி வெளியானதிலிருந்து ராணுவத்தில் உள்ள பெண்கள் தொடர்பாக தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன. இயற்கையிலேயே ஆண்களின் உடலிலிருந்து வித்தியாசம் கொண்டவர்கள் பெண்கள். எனினும் ராணுவத்தில் இருபாலினத்தவர்களுக்கும் சீருடை ஒரே மாதிரி தான் வழங்கப்படுகிறதாம்.
சீருடை மட்டுமன்றி பெண்கள் அணியும் உள்ளாடைகளுக்கும் அனுமதி கிடையாதாம். அதாவது ஆண்கள் என்ன உள்ளாடைகள் அணிவார்களோ, பெண்களும் அதையே தான் அணிய வேண்டும். இப்படிப்பட்ட நிலையில் எப்படி இராணுவத்தில் சேர பெண்கள் ஆர்வம் காட்டுவார்கள்? எனவே வரலாற்றிலேயே முதன்முதலாக தற்போது உடை தொடர்பில் மாற்றங்கள் கொண்டுவரப்படவுள்ளது.
இதன்படி பெண்களுக்குரிய உள்ளாடைகள் அணிய அனுமதி அளிக்கப்படவுள்ளன. அதிலும் கோடை காலத்திற்கும், குளிர் காலத்திற்கு ஏற்றார் போல வெவ்வேறு விதமாக உள்ளாடைகள் அளிக்கப்போவதாக இராணுவம் அறிவித்துள்ளது.